V4UMEDIA
HomeNewsKollywoodநரிக்குறவர் பெண்களுடன் அமர்ந்து யாத்திசை படம் பார்த்த பிரேமலதா விஜயகாந்த்

நரிக்குறவர் பெண்களுடன் அமர்ந்து யாத்திசை படம் பார்த்த பிரேமலதா விஜயகாந்த்

சில தினங்களுக்கு முன்பு அதாவது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக தமிழில் யாத்திசை என்கிற படம் வெளியானது. தரணி ராஜேந்திரன் என்பவர் இயக்கி இருந்த இந்தப்படம் வரலாற்றுப்படமாக வெளியானது.

இந்த படத்தில் சோழர்களுக்கும் பாண்டியர்களுக்குமான பகை, அதில் எயினர்கள் என்கிற கூட்டம் எப்படி தங்களுக்கான உரிமையை நிலைநாட்ட முயற்சிக்கிறது என்பதை ஆதாரங்களுடன் விளக்கி இருந்தார் இயக்குனர் தரணி ராஜேந்திரன்.

அதைவிட குறைந்த பட்ஜெட்டில் அதேசமயம் நேர்த்தியாகவும் பிரம்மாண்டமாகவும் இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. ரசிகர்களிடம் இந்த படம் ஓரளவுக்கு வரவேற்பையும் பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தை கேப்டன் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு திரையரங்கில் பார்த்து ரசித்தார்.

அது மட்டுமல்ல சமீபத்தில் ஒரு திரையரங்கில் நரிக்குறவர் இன பெண்களை அனுமதிக்க மறுத்து இன பாகுபாடு காட்டியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி விவாதத்தை எழுப்பியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது தன்னுடன் 100 நரிக்குறவர் பெண்களையும் அழைத்துச் சென்று இந்த படத்தை பார்த்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.

படம் பார்த்துவிட்டு இந்த படம் மிகவும் அருமையாக எடுக்கப்பட்டுள்ளது என்று படக்குழுவிற்கு தனது வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

Most Popular

Recent Comments