சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் வருமே 12ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ராவணக்கோட்டம். மதயானை கூட்டம் என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்துள்ளார்.
பிரபு, இளவரசு, தீபா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்த படம் மே பன்னிரண்டாம் தேதி வெளியாக இருப்பதை தொடர்ந்து இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் பேசிய அனைவருமே படப்பிடிப்பில் விக்ரம் சுகுமாரன் எப்படி ஒரு ஸ்ட்ரிக்ட்டான இயக்குனராக சீரியஸாக நடந்து கொண்டார் என்பதையும் படத்தைத் தவிர வேறு எதையுமே அவர் நினைக்கவில்லை என்பதையும் குறித்து பேசினார்கள்.
இதற்கு பதில் அளித்து பேசிய இயக்குனர் விக்ரம் சுகுமாரன் பேசும்போது, “இந்தப் படத்தில் நான் சிரித்துக் கூட பேசவில்லை, அது கொஞ்சம் குற்ற உணர்வாக இருக்கிறது, இருந்தும் யாரும் என்னை விட்டுக் கொடுக்காமல் பேசினார்கள் அனைவருக்கும் நன்றி. என்று பேசினார். மேலும் அவர் கூறும்போது இந்தப் படம் மிகப்பெரிய நெருக்கடியில் தான் உருவானது, அதற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி,. இந்தப் படத்தில் பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளார் நடிகர் ஷாந்தனு, மிகப்பெரும் பாரத்தைத் தலையில் ஏற்றிக் கொண்டார், அவருக்கு இந்தப் படம் பெயர்ச் சொல்லும் படைப்பாக இருக்கும். கண்டிப்பாக இது மிகப்பெரிய வெற்றியாக அமையும் என்றார்.
நாயகன் சாந்தனு இந்த படம் குறித்து தனது அனுபவத்தை பேசும்போது ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டார். குறிப்பாக இந்த படத்தில் படப்பிடிப்பின் போது முழு பொறுப்பையும் தானே தலையில் சுமந்ததால் ஏற்பட்ட மன அழுத்தத்தையும் அதனால் சில நாட்கள் தனியாக சென்று கதறிய அனுபவத்தையும் ஒருமுறை தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட நினைத்ததாகவும் கூறி மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்
ஆனால் பல குழுவினர் தந்த ஒத்துழைப்பால் அதிலிருந்து மீண்டு தற்போது படத்தை ரிலீஸ் செய்து கொண்டு வந்து விட்டதா குறித்து தனது சந்தோஷத்தையும் வெளிப்படுத்தினார் சாந்தனு.