சமீபத்தில் தமிழக திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஏற்கனவே தலைவராக இருந்த முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணியும் விநியோகஸ்தராக மன்னன் தலைமையில் இன்னொரு அணியும் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் தயாரிப்பாளர்கள் என்கிற முறையில் நேரில் வந்து தங்களது வாக்கை செலுத்தினர். அதனால் முன்னை விட இந்த தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
இந்த நிலையில் இந்த தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு மீண்டும் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி ராமசாமி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 615 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றார்.
மேலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் ஜி கே எம் தமிழ் குமரன் 651 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
மேலும் திரு. சந்திரபிரகாஷ் ஜெயின் அவர்களுக்கும், செயலாளராக மீண்டும் தேர்ந்தடுக்கப்பட்டுள்ள திரு.R. ராதாகிருஷ்ணன் மற்றும் திரு. S. கதிரேசன் அவர்களுக்கும், துணை தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. G.K.M. தமிழ் குமரன் மற்றும், திருமதி அர்ச்சனா கல்பாத்தி அவர்களுக்கும், இணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.S. சௌந்தரபாண்டியன் அவர்களுக்கும், மற்றும் தேர்வாகியுள்ள 26 செயற்குழு உறுப்பினர்களுக்கும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது