V4UMEDIA
HomeNewsKollywoodசிம்புவை தொடர்ந்து ஆர்யாவுடன் கூட்டணி சேர்ந்த கௌதம் கார்த்திக்

சிம்புவை தொடர்ந்து ஆர்யாவுடன் கூட்டணி சேர்ந்த கௌதம் கார்த்திக்

நடிகர் கார்த்திக்கின் மகனாக வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்தாலும் இயக்குனர் மணிரத்னத்தால் அறிமுகம் செய்யப்பட்ட பெருமைக்கு உரியவர் நடிகர் கௌதம் கார்த்திக். கிட்டத்தட்ட அவர் சினிமாவில் மறைந்து 10 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் ஒரு டீசன்டான வெற்றிக்காக போராடி வருகிறார்.

அந்த வகையில் அவர் மிகவும் எதிர்பார்த்து சிம்புவுடன் இணைந்து நடித்த பத்து தல திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. ஆனாலும் எதிர்பார்த்த வெற்றியை கௌதம் கார்த்திக்கிற்கு பெற்று தர தவறியது.

அதை தொடர்ந்து வெளியான 1947 ஆகஸ்ட் 16 திரைப்படமும் கௌதம் கார்த்திக்கை ஏமாற்றியது. இந்த நிலையில் தற்போது மீண்டும் இரட்டை ஹீரோ சப்ஜெக்ட்டில் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து மிஸ்டர் எக்ஸ் என்கிற படத்தில் நடிக்கிறார் கௌதம் கார்த்திக்.

சர்தார், காரி உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. எஃப்ஐஆர் என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை இயக்கிய மனு ஆனந்த் இப்படத்தின் கதையை எழுதி இயக்குகிறார்.

இதில் ஆர்யா கதாநாயகனாகவும், கவுதம் கார்த்திக் வில்லனாகவும் நடிக்கின்றனர். மிகப்பிரம்மாண்ட ஆக்ஷன் படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் பல சண்டைக்காட்சிகளின் படப்பிடிப்பு உகாண்டா மற்றும் செர்பியா போன்ற நாடுகளில் நடைபெற உள்ளது.

மரகத நாணயம், பேச்சிலர், கனா, நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களுக்கு இசையமைத்த திபு நிபுணன் தாமஸ் இசையமைக்கிறார். படத்தில் பங்கேற்கும் மற்ற நடிகர் நடிகைகள் விபரம் விரைவில் வெளியாக உள்ளது.

Most Popular

Recent Comments