தமிழ் திரை உலக பொருத்தவரை இயக்குனர் சங்கத் தேர்தலோ அல்லது பெப்சிக்கான தேர்தலோ பெரிய பரபரப்பு இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்து விடும். யாரோ ஒருத்தரை எந்த வித போட்டியும் இல்லாமல் கூட தேர்ந்தெடுத்து விடுவார்கள். ஆனால் நடிகர் சங்க தேர்தல் மற்றும் தயாரிப்பாளர் சங்க தேர்தல் என்றால் எப்போதுமே இரண்டு அணியினர் பரபரப்பாக மோதுவது வாடிக்கை.
இதற்கு முன் நடிகர் விஷால் தலைமையில் அப்படி ஒரு பரபரப்பான தேர்தல் சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் ஏற்கனவே இருக்கும் தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணியும் விநியோகஸ்தர் மன்னன் தலைமையில் இன்னொரு அணியும் போட்டியிட்டது.
நேற்று நடைபெற்ற இந்த தேர்தலில் தயாரிப்பாளர்கள் பெரிய அளவில் கலந்து கொண்டு தங்களது வாக்குகளை செலுத்தினர்.
ஒரு நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் பயணித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் நேரிலேயே வந்து தனது வாக்கை செலுத்தினார்.
அதுமட்டுமல்ல ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் நடிகர் கமலும் இந்த தேர்தலில் கலந்து கொண்டு வாக்களித்தார்.
அடையாறில் உள்ள ஜானகி எம் ஜி ஆர் கல்லூரியில் இந்தத் தேர்தல் அமைதியாக முறையில் நடைபெற்றது.