கர்ணன் படத்தை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்கிற படத்தை இயக்கினார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் பஹத் பாசில் வில்லனாக நடிக்க முக்கிய வேடத்தில் ஒரு சிறய இடைவெளிக்குப் பிறகு நடிகர் வடிவேலு நடித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடமே முடிவடைந்துவிட்ட நிலையில் இதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் வெளியாகி உள்ளது.
இந்த படத்தை முடித்துவிட்ட கையோடு அடுத்ததாக வாழை என்கிற சிறிய பட்ஜெட் படத்தையும் இயக்கி முடித்து விட்டார் இயக்குனர் மாரி செல்வராஜ். அதைத்தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் தனுஷ் நடிக்கும் படத்தையும் இயக்கும் பணிகளை துவங்கிவிட்டார் மாரி செல்வராஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது.