V4UMEDIA
HomeNewsKollywoodசிந்து சமவெளி நாகரிகத்தை படமாக்க ராஜமவுலியிடம் ஆனந்த் மஹிந்திரா கோரிக்கை

சிந்து சமவெளி நாகரிகத்தை படமாக்க ராஜமவுலியிடம் ஆனந்த் மஹிந்திரா கோரிக்கை

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, வரலாற்று படங்களை இந்த காலகட்டத்தில் எளிதாக படமாக்கி விட முடியும் என்கிற நம்பிக்கை பல இயக்குனர்களிடம் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் தமிழில் கூட நீண்ட கால கனவாக இருந்த பொன்னியின் செல்வன் நாவலை, பாகுபலி படம் கொடுத்த ஊக்கத்தில் தான் இரண்டு பாகங்களாக இயக்க முடிந்தது என இயக்குனர் மணிரத்னம் கூட சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, சிந்து சமவெளி நாகரிகம் குறித்து படம் இயக்குங்கள் என இயக்குனர் ராஜமவுலிக்கு ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.

மேலும் ஹரப்பா நாகரிகம் குறித்த புகைப்படங்களை பகிர்ந்து கொண்டதுடன் அந்த காலகட்டத்தில் பின்பற்றப்பட்ட நாகரிக முறைகளை திரைப்படமாக வெளிக்கொண்டு வந்தால் அது உலகத்திற்கு ஒரு விழிப்புணர்வாக இருக்கும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த இயக்குனர் ராஜமவுலி, ‘நிச்சயமாக சார்.. மகதீரா படத்தின் படப்பிடிப்பை தோலாவிராவில் நடத்தியபோதே அங்குள்ள ஒரு மிக பழமையான மரத்தையும் அது எப்படி தொன்மையான ஒன்றாக மாறி இருந்தது என்பதையும் பார்த்தபோது சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் படமாக்க வேண்டும் என்கிற எண்ணம் அப்போதே எழுந்தது. அதன் பிறகு பாகிஸ்தானில் உள்ள மொகஞ்சதாரோ நகரத்தை பார்வையிட முயற்சித்தபோது எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது” என்று கூறியுள்ளார்.

Most Popular

Recent Comments