V4UMEDIA
HomeNewsKollywoodமே-5ல் வெளியாகும் தீர்க்கதரிசி

மே-5ல் வெளியாகும் தீர்க்கதரிசி

அஞ்சாதே படத்தில் இயக்குனர் மிஷ்கினால் அறிமுகப்படுத்தப்பட்டு சற்று வில்லத்தனம் கலந்த நடிப்பால் ரசிகர்களின் பாராட்டை பெற்றவர் நடிகர் அஜ்மல். அதன்பின் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் மற்றும் நடிகர் ஜெய்வந்த் ஆகியோருடன் அஜ்மல் இணைந்து தீர்க்கதரிசி என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அஜ்மல்  போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

மேலும் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை இரட்டை இயக்குனர்களான பி.ஜி.மோகன் – எல்.ஆர்.சுந்தரபாண்டி ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர்.

இந்தநிலையில் இந்தப்படம் வரும் மே 5ஆம் தேதி ரிலீஸாக இருப்பதாக அறிவிப்பு வெளியாக இருக்கிறது.  

Most Popular

Recent Comments