ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகி அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே முதல் பாகத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படித்த ரசிகர்கள் அனைவருமே இந்த நாவல் படமானால் எப்படி இருக்கும் என கடந்த 50 வருடங்களாகவே தங்கள் மனதிற்குள் நினைத்து வந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் இந்த நாவலை படிக்கும் போது இதை எப்படி தங்கள் மனதில் காட்சிப்படுத்தி இருப்பார்களோ அதற்கு தற்போது திரைப்படமாக உருவம் கொடுத்துள்ளார் இயக்குனர் மணிரத்னம்.
முதல் பாதத்தை விட இரண்டாம் பாகம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கிறது என்று விமர்சனங்கள் பாசிட்டிவாக வந்து கொண்டிருக்கிறது. முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகத்திற்கு படத்தின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் ரொம்பவே ஆர்வமாக புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கடந்த ஒரு மாதமாகவே கலந்து கொண்டு வருகின்றனர். நேற்று வரை கூட இந்த பிரமோஷன் நிற்கவில்லை
அதேபோல இன்று காலை விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சோபிதா துலிபாலா, விக்ரம் பிரபு, ஜெயராம் என இந்த படத்தில் நடித்திருந்த முன்னணி நட்சத்திரங்கள் பலரும் சென்னையில் உள்ள சில திரையரங்குகளில் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் கண்டு களித்தனர்.