நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி முதல் முறையாக தயாரிப்பில் இறங்கி தமிழில் எல்ஜிஎம் அதாவது லெட்ஸ் கெட் மேரிட் என்கிற படத்தை தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தில் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாண் நடிக்க கதாநாயகியாக லவ் டுடே புகழ் இவானா நடித்து வருகிறார்.முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, நதியா நடிக்கின்றனர். இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்த அனுபவம் குறித்து இவானா கூறும்போது, “படப்பிடிப்பின் எந்த ஒரு தருணத்திலும் போர் என்பதே அடிக்கவில்லை அந்த அளவுக்கு ஜாலியாக இருந்தது. குறிப்பாக லவ் டுடே படத்திற்குப் பிறகு இந்த படத்தில் மீண்டும் யோகி பாபுவுடன் இணைந்து நடிக்கின்றேன்.

படப்பிடிப்பில் அவர் எப்போதும் சுற்றி உள்ளவர்களை கலகலப்பாக வைத்திருப்பதுடன் காட்சிகளில் நடிக்கும்போது நமக்கு வசதியாக இருக்கும்படியும் பார்த்துக் கொள்வார். அதனால் படப்பிடிப்பில் நேரம் போவது தெரியாமல் ஜாலியாக இருந்தது” என்று கூறியுள்ளார் இவானா.