தமிழில் தனுஷ் நடித்த சீடன் படம் மூலமாக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மலையாள நடிகர் உன்னி முகுந்தன். தொடர்ந்து அனுஷ்காவுடன் நடித்த பாகமதி, சமீபத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்த யசோதா உள்ளிட்ட படங்கள் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர். இந்தநிலையில் மலையாளத்தில் அவர் நடித்திருந்த மாளிகைபுரம் என்கிற படம் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
சுவாமி ஐயப்பனையும் அவருக்காக சன்னிதானத்தில் காத்திருக்கும் மாளிகைப்புரத்தம்மனையும் மையப்படுத்தி உருவாகி இருந்த இந்த படத்தில் ஐயப்பன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் உன்னி முகுந்தன் இந்த படம் மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்றது.
இந்த நிலையில் கேரளாவுக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசும் வாய்ப்பு உன்னி முகுந்தனுக்கு கிடைத்தது.
இதனை தொடர்ந்து பிரதமரை சந்தித்து பேசிய உன்னி முகுந்தன் அவருக்கு சிலை ஒன்றை பரிசாக அளித்தார்.
தொடர்ந்து ஆன்மீகம் சார்ந்த கருத்துக் கொண்ட படங்களை குறிப்பாக மாளிகைபுரம் போன்ற படங்களை எடுத்து இந்து மதத்தின் மேன்மையை அனைவருக்கும் உணர்த்தும் பணியை செய்து வருவதால் அவரை சந்தித்து பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார் பிரதமர் மோடி என்று தெரிகிறது..