V4UMEDIA
HomeNewsKollywoodஏப்ரல் 27 ல் மார்க் ஆண்டனி டீசர் ரிலீஸ்

ஏப்ரல் 27 ல் மார்க் ஆண்டனி டீசர் ரிலீஸ்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ரிது வர்மா நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியான நாளிலிருந்து விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா ஆகியோரின் கதாபாத்திர போஸ்டர்கள் ஆர்வத்தை தூண்டும் விதமாகவே இருந்து வருகின்றன.

மேலும் இந்த படத்தில் செல்வராகவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்திருக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 99% நிறைவடைந்து விட்டதாக சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியானது.

இன்னும் ஒரு நாள் படப்பிடிப்பு மட்டுமே நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்கிற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

குறிப்பாக இந்த டீசர் வில்லனாக நடித்துள்ள எஸ்ஜே சூர்யாவை மையப்படுத்தி உருவாகி உள்ளது என்பது இந்த அறிவிப்பு போஸ்டரிலேயே தெரிந்து கொள்ள முடிகிறது .

Most Popular

Recent Comments