V4UMEDIA
HomeNewsKollywood50 வருட கனவுக்கு உயிர்கொடுத்த பாகுபலி ; இயக்குனர் மணிரத்னம் நெகிழ்ச்சி

50 வருட கனவுக்கு உயிர்கொடுத்த பாகுபலி ; இயக்குனர் மணிரத்னம் நெகிழ்ச்சி

கடந்த 40 வருடங்களாகவே சரித்திர மற்றும் புராண படங்களை எடுப்பதற்கு பெரிய அளவில் யாரும் முன் வரவில்லை, கிட்டத்தட்ட எம்ஜிஆர், சிவாஜி காலத்துடன் அவை மலை ஏறிவிட்டன. அதன்பிறகு சமூக படங்களாகவே வெளிவந்து கொண்டிருந்தன.

அப்படிப்பட்ட சமயத்தில் தான் கமல் மருதநாயகம் போன்ற வரலாற்று படங்களை எடுக்க முயற்சித்தனர். படத்தின் பட்ஜெட் உள்ளிட்டவை மிகப்பெரிய தடையாக இருந்ததால் அவை வெறும் முயற்சியாகவே துவக்கத்திலேயே நின்று விட்டன.

அப்படித்தான் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலையும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், நடிகர் கமல் ஆகியோர் படமாக்க முயற்சி செய்து அந்த முயற்சியும் நிறைவேறாமல் நின்று விட்டது. இந்த நிலையில் தான் இயக்குனர் மணிரத்னம் துணிச்சலாக இந்த முயற்சியை மேற்கொண்டு பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்கள் கொண்ட படமாக எடுத்து முதல் பாகத்தை வெளியிட்டு வெற்றியும் பெற்றுவிட்டார். இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மணிரத்னம், “பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க எம்ஜிஆர், கமல் போன்றவர்கள் முயற்சி செய்து சில காரணங்களால் அதை தொடர முடியாமல் கைவிட்டு விட்டனர். நானும் அதை எடுக்க விரும்பினாலும் அன்றைய சூழலில் படஜெட் உள்ளிட்ட பல விஷயங்கள் பூதாகரமாக தெரிந்தன.

இந்த நிலையில் தான் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் ஒரு புதிய உத்வேகத்தை கொடுத்தது. குறிப்பாக வரலாற்று படங்களுக்கு இவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்பதையும் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட்டாலும் ரசிகர்கள் தவறாமல் வரவேற்பு தருவார்கள் என்பதையும் அந்த படம் புரிய வைத்தது,

அதற்காக பாகுபலி படத்திற்கும் இயக்குனர் ராஜமவுலிக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாகுபலி படம் கொடுத்த நம்பிக்கையினால் தான் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் இறங்கினேன் என்று கூறியுள்ளார்.

Most Popular

Recent Comments