V4UMEDIA
HomeNewsKollywoodஅயலான் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஏலியன்

அயலான் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஏலியன்

இன்று நேற்று நாளை படத்தை இயக்கியவர் ரவிக்குமார், டைம் மெஷின் என்கிற கான்செப்ட்டை வைத்து சுவாரசியமாக அந்த படத்தை இயக்கிய அவர் அடுத்ததாக தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படமும் சயின்ஸ் பிக்சன் பாணியில் தான் உருவாகியுள்ளது. குறிப்பாக வேற்றுக்கிரகவாசி எனப்படும் ஏலியன் என்கிற கதாபாத்திரம் இந்த படத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது.

இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் கோட்டப்பாடி கே ராஜேஷ் படம் குறித்தும் படத்தில் இடம்பெற்றுள்ள ஏலியன் கதாபாத்திரம் குறித்தும் ஒரு சுவாரசியமான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதாவது இந்த ஏலியன் கதாபாத்திரத்தை உருவாக்குவதற்கு மட்டும் இரண்டு கோடி ரூபாய் செலவானது என்றும் இதன் அசைவுகள் மட்டுமே கிராபிக்ஸில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த ஏலியன் அயலான் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொள்ள இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

 அது மட்டுமல்ல இதுவரை பிரம்மாஸ்திரா மட்டும்தான் 4,000 விஎஃப்எக்ஸ் காட்சிகள் மேற்கொள்ளப்பட்டு வெளியானது. இந்த அயலான் படம் 4500 வி எஃப் எக்ஸ் காட்சிகள் நிறைந்ததாக வெளியாக இருக்கிறது. நிச்சயம் ரசிகர்களுக்கு இது புதுவிதமான அனுபவமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

Most Popular

Recent Comments