V4UMEDIA
HomeNewsKollywoodலிங்குசாமி கைதாவது ரத்து ; ஆறு வார அவகாசம் அளித்த நீதிமன்றம்

லிங்குசாமி கைதாவது ரத்து ; ஆறு வார அவகாசம் அளித்த நீதிமன்றம்

இயக்குனர் லிங்குசாமி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த இயக்குனராக ஒரு பக்கம் பலம் வந்து கொண்டிருந்த சமயத்தில் பட தயாரிப்பிலும் இறங்கி தனது சகோதரர்கள் பெயரில் திருப்பதி பிரதர்ஸ் என்கிற நிறுவனத்தை துவங்கி படங்களையும் தயாரித்து வந்தார்.

ஆரம்பத்தில் சில படங்கள் தொடர்ந்து வெற்றி படங்களாக மாறின. ஆனால் அதன் பிறகு உத்தம வில்லன், ரஜினி முருகன் ஆகிய படங்களை தயாரித்த வகையில் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்தார்.

இதில் உத்தமவில்லன் தோல்வி படமாக மாறியது. ரஜினி முருகன் படம் வெற்றி படமாக மாறினாலும் பொருளாதார ரீதியாக லிங்குசாமிக்கு எந்த பிரயோஜனமும் இல்லாமல் போனது.

இந்த நிலையில் பைனான்சியர்களிடமிருந்து வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என்று நீதிமன்றத்தில் அவர் மேல் வழக்கு தொடரப்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் அதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த லிங்குசாமி தற்போது தானும் தனது சகோதரரும் சேர்ந்து கடத்தொகையில் 20% செலுத்தி உள்ளதாகவும் மீதி தொகையையும் நாங்கள் விரைவில் செலுத்தி விடுவதாகவும் கூறி சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டுகோள் வைத்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் லிங்குசாமியின் சிறை தண்டனையை ரத்து செய்தவுடன் ஆறு வார கால அவகாசத்திற்குள் மீதி தொகையை உரியவர்களுக்கு திருப்பி தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்..

Most Popular

Recent Comments