விஷால் நடித்த படங்களிலேயே தொலைக்காட்சிகளில் அதிக முறை ஒளிபரப்பப்படும் படங்கள் என்றால் சண்டக்கோழி, தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் தான். இதில் தாமிரபரணி, பூஜை என இரண்டு படங்களையும் இயக்கியது இயக்குனர் ஹரி தான். இந்த இரண்டு படங்களுமே கமர்சியல் அம்சங்களுடன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகி இருந்தன. அதனால் தான் இந்த இரண்டு படங்களுக்கும் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் கிரேஸ் உள்ளது.

இவர்கள் எப்போது மூன்றாவது படத்தில் இணைவார்கள் என்கிற ஒரு எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாகவே நிலவி வந்தது. கடந்த சில நாட்களாக ஹரி டைரக்ஷனில் விஷால் நடிக்கப் போகிறார் என்கிற செய்தி கூட வெளியாகி வந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த கூட்டணி மூன்றாவது படத்திற்காக இணைந்துள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் மற்றும் ஜீ நிறுவனம் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் விஷால் நடிக்க, ஹரி அந்த படத்தை இயக்குகிறார் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது விஷாலின் 34 ஆவது படமாக உருவாகிறது. அருவா படத்தை தொடர்ந்து இயக்குனர் ஹரி சற்று இறங்கு முகத்தில் இருந்தாலும், தற்போது விஷாலுடன் இவர் அமைத்திருக்கும் கூட்டணி அவரை முன்போல் சிங்கமாக சீறி எழ செய்யும் என எதிர்பார்க்கலாம்.