
கொரோனா முதல் அலை தீவிரமாக இருந்த காலகட்டத்தில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள “ஜவஹர்” பொறியியல் கல்லூரியில் அரசு அனுமதியுடன் இலவச சித்த மருத்துவம் மையம் ஒன்று அமைக்கப்பட்டு. அதனை சித்த மருதத்துவர் வீரபபாபு தனது தலைமையில் மிக சிறப்பாக செயல்படுத்தி ராப்பகலாக பணியாற்றி பல உயிர்களை காப்பாற்றினார். இவரது சேவையை பெருமைப்படுத்தும் விதமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தே அவரை பாராட்டினார்.
அதன் பிறகு ஒரு பேட்டியில் தனக்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வம் இருக்கிறது என்று கூறிய வீரபாபு தற்போது முடக்கறுத்தான் என்கிற படம் மூலமாக கதாநாயகனாக அடி எடுத்து வைத்துள்ளார்.

அது மட்டுமல்ல இந்த படத்தின் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் ஆகியவற்றை எழுதி பின்னணி இசை அமைத்து இந்த படத்தை தயாரித்து அவரே இயக்கவும் செய்துள்ளார். டாக்டர் என்பதால் இந்த படத்தில் சித்த மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வு கதையை எடுப்பார் என பார்த்தால் அதிரடி ஆக்சன் படமாக இந்த முடக்கறுத்தான் படத்தை உருவாக்கியுள்ளார் என்பது ஆச்சரியப்படுத்துகிறது.
மே 19ஆம் தேதி இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் டாக்டர் வீரபாபு. நிச்சயம் ஒரு கதாநாயகனாகவோ அல்லது இயக்குனராகவோ சினிமா துறையிலும் டாக்டர் வீரபாபு நிச்சயமாக முத்திரை பதிப்பார் என நம்பலாம்.