விஜய்சேதுபதி நடிப்பில் அவரது ஐம்பதாவது படமாக உருவாக இருக்கிறது மகாராஜா திரைப்படம். குரங்கு பொம்மை படத்தின் மூலம் கவனிக்கத்தக்க இயக்குனராக மாறிய நித்திலன் சுவாமிநாதன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக இமைக்கா நொடிகள் என்கிற படத்தில் விஜய் சேதுபதி மற்றும் அனுராக் காஷ்யப் இருவரும் நடித்திருந்தாலும் இருவரும் இணைந்து நடித்த காட்சிகள் என எதுவும் அந்த படத்தில் இடம்பெறவில்லை.

அந்த வகையில் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் என்று இதை சொல்லலாம்.

இந்த படத்தில் மேலும் நட்டி நட்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க முனீஸ் காந்த், அருள்தாஸ், மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு காந்தாரா புகழ் அஜனீஸ் லோக்நாத் இசையமைக்க உள்ளார்.