ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே சூர்யா இருவரும் இணைந்து நடித்து வரும் படம் மார்க் ஆண்டனி. இந்த படம் ஒரு அதிரடி ஆக்சன் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார்.

இதில் மார்க், ஆண்டனி என்கிற இரண்டு கதாபாத்திரங்களிலும் விஷால் தான் நடித்து வருகிறார் என்று ஏற்கனவே இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சஸ்பென்சை உடைத்துள்ளார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இன்னும் அதிகரித்துள்ளது.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார். சமீபத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்கி முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு நாள் படப்பிடிப்பு மட்டுமே நடத்த வேண்டி இருப்பதாக படக்குழுவினர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.