Home News Kollywood மாவீரன் பட ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு.. எப்போது தெரியுமா ?

மாவீரன் பட ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு.. எப்போது தெரியுமா ?

கடந்த வருடம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் ரசிகர்களை நிறையவே எதிர்பார்க்க வைத்து, நிறையவே ஏமாற்றவும் செய்தது. காரணம் தெலுங்கில் ஹிட் படம் கொடுத்த ஒரு இயக்குனர் முதன்முறையாக சிவகார்த்திகேயனை வைத்து தமிழில் படம் இயக்குகிறார் என்பதுதான்.

ஆனால் அதையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு, அடுத்ததாக தற்போது தான் நடித்துவரும் மாவீரன் படத்தை தான் சிவகார்த்திகேயன் ஆவலுடன் எதிர்பார்க்கிறார். யோகிபாபுவை கதையின் நாயகனாக வைத்து மண்டேலா என்கிற படத்தை இயக்கி தேசிய விருதும் வாங்கிய இயக்குனர் மடோன் அஸ்வின் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

கதாநாயகியாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்தார். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் யோகி பாபு இணைந்து நடித்துள்ளார். இந்த படத்திற்கு புதியவரான பரத் ஷங்கர் என்பவர் தான் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதை இந்த படத்தின் மேக்கிங் வீடியோவுடன் தெரிவித்துள்ளனர், மாவீரன் படக்குழுவினர்