நடிகர் தனுஷ் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர். குறிப்பாக ஐபிஎல் போட்டிகள் நடக்கும்போது அது எங்கு நடந்தாலும் தவறாமல் நேரில் சென்று பார்த்து ரசிப்பவர். தற்போது கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறைவடைந்துள்ள நிலையில் ஓய்வில் இருக்கும் தனுஷ் தொடர்ந்து நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளை பார்த்து ரசித்து வருகிறார்.
அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்தார். இதே ஐபிஎல் போட்டியை பார்க்க வந்த, கேப்டன் மில்லர் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்து வரும் நடிகர் சிவராஜ் குமாருடன் இணைந்து இந்த போட்டியை கண்டு ரசித்தார் தனுஷ்.
இந்த நிலையில் சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த போட்டியை தனுஷ் பார்த்து ரசித்தார்.
இதில் என்ன ஹைலைட் என்றால் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் இந்த போட்டியை நேரில் பார்த்து ரசித்தார்.
அப்பொழுது அங்கு வந்த தனுஷை பார்த்த முதல்வ,ர் தன்னருகில் வந்து அமர்ந்து போட்டியை கண்டு ரசிக்குமாறு தனுஷுக்கு அழைப்பு விடுத்தார்.
இதை ஏற்று அவரும் கொஞ்ச நேரம் முதல்வருடன் அமர்ந்து ஐபிஎல் போட்டியை பார்த்து ரசித்தார். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.