தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் இளம் வயது பள்ளி பருவத் தோற்றத்திலும் ஒரு கல்லூரி மாணவனுக்கு தந்தையாக இருக்கக் கூடிய தோற்றத்திலும் நடிக்கும் அளவிற்கு தன்னை ஒரு மிகச்சிறந்த நடிகராக உருமாற்றம் செய்து கொள்பவர் என்றால் தற்போதைய சூழலில் தனுஷ் ஒருவர் தான் இருக்கிறார். அப்படி கதைக்கவும் கதாபாத்திரங்களுக்காகவும் தன்னை மாற்றிக்கொண்டு நடிப்பவர் என்பதாலேயே பாலிவுட், ஹாலிவுட்டிலும் அவருக்கு பட வாய்ப்புகள் தானாக தேடி வருகிறன.

இந்த 40 வயதில் தமிழ் சினிமாவில் இருந்து ஹாலிவுட் வரை சென்று கலக்கிய வெகு சில நடிகர்களின் தனுஷும் ஒருவர். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்று வரும் சிஐஐ தக்ஷின் நிகழ்வில் தனுஷுக்கு 2023க்கான யூத் ஐகான் விருது வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்த நிகழ்வில் பேசிய தனுஷ், இப்படி 40 வயது வரை சினிமாவில் நீடித்திருப்பேன் என்றோ இப்படி ஒரு யூத் ஐகான் விருது வாங்குவேன் என்றோ நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று கூறினார்.

தனுஷுக்கு இந்த விருது வழங்கப்பட்டது குறித்து அவரது ஆஸ்தான இயக்குனர் சுப்பிரமணியம் சிவா கூறும்போது, தூக்கத்தில் வருவதல்ல கனவு.. உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு என்று சொன்னார ஐயா அப்துல் கலாம்.. அன்பாலான தம்பி தனுஷ்.. நல்வாழ்த்துக்கள் இன்னும் பல விருதுகள், நீங்கள் வாங்கினால் தான் தனக்கு பெருமை என யாருக்கும் சொல்லாமல் உங்கள் கைப்பட காத்திருக்கிறது என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.