V4UMEDIA
HomeNewsKollywoodஇருக்கை நுனியில் அமர வைக்கும் ஹாரர் திரில்லர் ஆக உருவாகும் ஜெனி

இருக்கை நுனியில் அமர வைக்கும் ஹாரர் திரில்லர் ஆக உருவாகும் ஜெனி

தமிழ் சினிமாவில் எப்படியும் வருடத்திற்கு நான்கு ஹாரர் படங்களாவது வெளியாகி விடுகின்றன. இதில் சில படங்கள் காமெடி ஜானரிலும் சில படங்கள் திரில்லர் பாணியிலும் உருவாகின்றன. அப்படி இருக்கையில் அமர வைக்கும் விதமாக உருவாகியுள்ள ஒரு ஹாரர் திரில்லர் படம் தான் ஜெனி.

நட்டி நட்ராஜ் நடித்த கதம் கதம் என்கிற படத்தை இயக்கியவர் பாபு தூயவன். மறைந்த பிரபல கதாசிரியரான தூயவனின் மகன் இவர். தற்போது பாபு தூயவனின் மனைவி A. முஸ்தரி தயாரித்திருக்கும் திகில் படம் தான் இந்த ஜெனி. திரைப்படக் கல்லூரியில் பயின்று சில படங்களையும் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியிருக்கும் நித்தியானந்தம்.B இயக்கத்தில் இந்தப்படம் உருவாகி இருக்கிறது.

பாரீஸ் ஜெயராஜ் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த விவாந்த் நாயகனாக நடித்துள்ளார். ‘மைடியர் பூதம்’ திரைப் படத்தில் குழந்தை நாயகனாக மிரட்டிய பரம் விக்னேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களோடு மைதிலி, பிஜாய் மேனன், ஆக்க்ஷன் பிரகாஷ் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்..

துஷ்ட ஆவி ஒன்று சிறுவனை ஆக்ரமிக்க முயல அதிலிருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் காக்க அந்த சிறுவனும் அவர் தந்தையும் போராடும் திகிலூட்டும் அமானுஷ்ய சம்பவங்கள் நிறைந்த இந்தப் படத்தின் கதை, திரைக் கதையை அறிவாற்றல் பிதா எழுத வசனத்தை பாஸ்கர் ராஜ் எழுதியிருக்கிறார்.

Most Popular

Recent Comments