கடந்த வருடம் வெளியான சர்தார், காரி, இந்த வருடம் வெளியான ரன் பேபி ரன் உள்ளிட்ட வெற்றி படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமன் குமார் தயாரிப்பில் அடுத்ததாக உருவாகும் படம் லப்பர் பந்து. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

கனா, எஃப்ஐஆர், நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி புகழ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் நடிக்கின்றனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

கடந்த மார்ச் முதல் வாரத்தில் துவக்க விழா பூஜை நடைபெற்ற நிலையில் தற்போது சென்னையை அடுத்துள்ள கூடுவாஞ்சேரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

கிராமத்து கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை தினேஷ் புருஷோத்தமன் மேற்கொள்ள, ஜி.மதன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.