தமிழ் திரை உலகத்தின் பல வருட வரலாற்றை எடுத்துப் பார்த்தால் எத்தனையோ ஆச்சரியமான விஷயங்கள் நடந்திருக்கும். ஒருசில ஏதேச்சையாக நடந்திருக்கலாம். ஒருசில நிகழ்வுகள் திட்டமிட்டு நடந்திருக்கலாம்.

உதாரணத்திற்கு ரஜினியின் பேவரைட் நடிகரான ரகுவரன் இதுவரை கமலுடன் இணைந்து நடித்ததில்லை. ரஜினியுடன் நடித்த நதியா இதுவரை கமலுக்கு ஜோடியாக நடித்ததில்லை. அதேபோல நடிகர் விவேக் கமலுடன் இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.

அந்த பட்டியலில் நடிகை நயன்தாராவும் இத்தனை வருட பயணத்தில் இதுவரை கமலுடன் இணைந்து நடித்ததில்லை. இதெல்லாம் ஏதோ ஒரு சூழலால் நடக்காமல் போன ஆச்சரிய விஷயங்கள். ஆனால் தற்போது நயன்தாரா கமலுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு இருப்பதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது.

குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் நாயகன் படத்தை தொடர்ந்து மீண்டும் கமல் ஒரு படத்தின் நடிக்க இருக்கிறார் என்கிற அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடிக்க நயன்தாராவுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதுநாள் வரை இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை என்பதுடன் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் கூட இல்லை என்பது தான் ஆச்சரியமான விஷயம்.

நயன்தாரா திரையுலகில் நுழைந்து 20 வருடங்கள் ஆகும் நிலையில் கமலுடன் இணைந்து நடித்தால் தான் அவரது திரை உலக பயணம் முழுமை அடையும் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.