இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி தனது தந்தை வழியிலேயே திரையுலக பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்தாலும் தந்தையை போல இயக்குனராக அல்லாமல் நடிகை அவதாரம் எடுக்கவே விரும்பினார். முதல் படமே நடிகர் கார்த்திக்கு ஜோடியாக முத்தையா இயக்கிய விருமன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அதிதிக்கு அமைந்து.
முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த அதிதி ஷங்கர், அடுத்ததாக சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து தற்போது விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம் அதிதி ஷங்கர்.
முண்டாசுப்பட்டி ராட்சசன் என இரண்டு வெற்றிப்படங்களில் இணைந்து பணியாற்றிய இயக்குனர் ராம்குமார் மற்றும் விஷ்ணு விஷால் கூட்டணியில் மூன்றாவது படமாக ஹாட்ரிக் வெற்றியை குறிவைத்து உருவாகும் இந்த படத்தில் அதிதி ஷங்கர் இணைந்துள்ளது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க இருக்கின்றனர். வரும் மே மாதம் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.