V4UMEDIA
HomeNewsKollywoodபிரபாஸை தொடர்ந்து ஜூனியர் என்டிஆருக்கும் வில்லனாக மாறிய சைஃப் அலிகான்

பிரபாஸை தொடர்ந்து ஜூனியர் என்டிஆருக்கும் வில்லனாக மாறிய சைஃப் அலிகான்

தமிழ், தெலுங்கு மட்டுமல்ல தென்னிந்திய மொழிகள் நான்கிலும் தற்போது பாலிவுட்டில் இருந்து பிரபலமான நடிகர்களை அழைத்து வந்து வில்லனாக நடிக்க வைப்பது தொடர்கிறது. அந்த வகையில் சமீப வருடங்களாக கேஜிஎப், அடுத்ததாக விஜயின் லியோ என முக்கியமான முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக சஞ்சய் தத் நடித்து வருகிறார்.

இதற்கு அடுத்த இடத்தில் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் தெலுங்கு படங்களில் வில்லனாக நடிக்க துவங்கியுள்ளார். அந்த வகையில் ஓம்ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ஆதிபுருஷ் என்கிற படத்தில் வில்லனாக அதாவது ராவணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சைஃப் அலிகான்.

இதைத் தொடர்ந்து தற்போது ஜூனியர் என்டிஆர் நடித்துவரும் அவரது முப்பதாவது படத்திலும் வில்லனாக நடிக்கிறார் சைஃப் அலிகான். கொரட்டாலா சிவா இயக்கி வரும் இந்தப் படம் மூலம் ஜூனியர் என்டிஆர் மற்றும் சைஃப் அலிகான் இருவரும் முதல் முறையாக இணைந்து நடிக்கின்றனர்.

இந்த படம் மூலம் நடிகை ஜான்வி கபூர் தெலுங்கில் அறிமுகமாகிறார். கடந்த மாதம் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடந்த பூஜைக்குப் பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது மேலும், ஏப்ரல் 5, 2024 அன்று படம் பான் இந்திய அளவில் வெளியாகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

Most Popular

Recent Comments