தொடர்ந்து அஜித்தை வைத்து நான்கு படங்களை இயக்கிய இயக்குனர் சிறுத்தை சிவா அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த என்கிற படத்தை இயக்கினார். இந்த படத்தை தொடர்ந்து அவர் திட்டமிட்டபடி தற்போது சூர்யா நடித்து வரும் அவரது 42வது படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரலாற்று பின்னணியில் உருவாக இருக்கிறது என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த படத்திற்கு கங்குவா என டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பலருக்கும் தேய்ந்திருக்க வாய்ப்பு இல்லாத ஒரு விஷயம் என்னவென்றால் கடந்த 1984ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமிழில் வெளியான மலையூர் மம்பட்டியான் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த படத்திற்கு கங்குவா என்று தான் டைட்டில் வைக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் கிட்டத்தட்ட 40 வருடங்கள் கடந்து மீண்டும் இந்த டைட்டில் சூர்யாவை தேடி வந்துள்ளது. அது மட்டுமல்ல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பட டைட்டிலில் சூர்யா நடிக்கும் முதல் படமும் இதுவே.

இந்த படத்தில் கதாநாயகியாக திசா பதானி நடிக்க முக்கிய நேரத்தில் யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர் ராஜா தயாரிப்பது உருவாகி வரும் இந்த படம் கோவா, சென்னை மற்றும் பல இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் மீதமிருக்கும் படப்பிடிப்பும் வரும் மாதங்களில் முடிந்துவிடும். வலிமை மிக்க கதாநாயகனின் பல்வேறு அவதாரங்களை இந்த ஆக்ஷன் எண்டர்டெயினர் திரைப்படம் 3டியில் காட்ட இருக்கிறது