V4UMEDIA
HomeNewsKollywoodபடமாகிறது முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு

படமாகிறது முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு

உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் இலங்கை அணியை சேர்ந்த முத்தையா முரளிதரனின் வாழ்க்கை திரைப்படமாக இருக்கிறது, இதில் விஜய்சேதுபதி முதலில் கதாநாயகனாக நடிக்கிறார் என்று சொல்லப்பட்டு அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.

ஆனால் தமிழகத்தில் பல அரசியல் கட்சிகளிடம் இருந்து இந்த படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க கூடாது என விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு எழுந்ததால் அவர் இந்த படத்தில் நடிப்பதில் இருந்து ஒதுங்கினார். அதன்பிறகு அடுத்த இரண்டு வருட காலங்களாக இந்த படம் என்ன ஆனது என்பது தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படம் மீண்டும் உயிர் பெற்றுள்ளது. 800 என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஸ்லம்டாக் மில்லியனர்’ படப்புகழ் நடிகர் மதுர் மிட்டல் முத்தையா முரளிதரனாகவும், மஹிமா நம்பியார் அவரது மனைவி மதிமலராகவும் நடிக்கின்றனர்.

இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் அசோசியேட் இயக்குநராக இருந்தவரும், ‘கனிமொழி’ (2010) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவருமான ஸ்ரீபதி, தற்போது ‘800’ படத்தின் மூலம் மீண்டும் இயக்கத்திற்கு திரும்பி உள்ளார்.

இலங்கை, சென்னை, கொச்சி, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டு இதன் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

Most Popular

Recent Comments