V4UMEDIA
HomeNewsKollywoodஹனுமேன் படப்பிடிப்பு நிறைவு

ஹனுமேன் படப்பிடிப்பு நிறைவு

 தொழில்நுட்பங்கள் அதிகரித்து வரும் நிலையில் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்குப் பிறகு புராண கால படங்கள் மீண்டும் ரசிகர்கள் இடையே வரவேற்பு பெற துவங்கியுள்ளன. அந்த வகையில் தற்போது பான் இந்தியா படமாக உருவாகி வரும் ஒரு படம் தான் ஹனுமேன்.

பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தில் தேஜா சஜ்ஜாவுடன் வினய் ராய், வரலட்சுமி சரத்குமார், அமிர்தா ஐயர், கெட்டப் சீனு, சத்யா, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்

ஹனு-மேன்’ அடிப்படையில் அஞ்சனாத்திரி எனும் கற்பனை இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கதாநாயகன் அனுமனின் சக்திகளை பெற்று, அஞ்சனாத்திரிக்காக எப்படி போராடுகிறான்? என்பதுதான் படத்தின் கதை. இந்த திரைப்படத்தின் உள்ளடக்கம் உலகளாவியதாக இருப்பதால், இந்த திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, கன்னடம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் இந்த திரைப்படம் வெளியாகிறது. பான்- வேர்ல்ட் வெளியீடாக வரவிருக்கும் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்.

Most Popular

Recent Comments