V4UMEDIA
HomeNewsKollywoodஅங்காரகன் டீசரில் சூப்பர் ஸ்டார் ரஜினியை வம்பிழுத்த சத்யராஜ்

அங்காரகன் டீசரில் சூப்பர் ஸ்டார் ரஜினியை வம்பிழுத்த சத்யராஜ்

நடிகர் சத்யராஜ் தற்போது குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அங்காரகன் என்கிற படத்தில் முக்கியமான வேடத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். குறிப்பாக இந்த படத்தின் மூலம் மீண்டும் வில்லன் அவதாரத்திற்கு திரும்பி உள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசரில் சத்யராஜின் குரலில் ஒலிக்கும் வசனங்களில் அவர் நான் அரசியல் கட்சி ஆரம்பித்தும் மக்களை ஏமாற்ற மாட்டேன், அரசியல் கட்சி ஆரம்பிக்க போகிறேன் ஆரம்பிக்கப் போகிறேன் என்று சொல்லியும் மக்களை ஏமாற்ற மாட்டேன் என்று வசனம் பேசியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி, தான் கட்சி துவங்குவதாக கூறி சில காரணங்களால் அதைத் துவங்க முடியாமல் அரசியலில் இருந்து ஒதுங்கினார். சூப்பர் ஸ்டார் ரஜினி கட்சி ஆரம்பிப்பதாக கூறியபோதும் அதை விமர்சித்தவர் சத்யராஜ். தற்போது அவர் தனது உடல்நிலை காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கிய பின்னரும் மீண்டும் தொடர்ந்து எதற்காக ரஜினியை விமர்சித்து வருகிறார் என ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல பொதுவான ரசிகர்களை கேட்க ஆரம்பித்து விட்டனர்.

தனது பப்ளிசிட்டிக்கு இதை ஒரு வாய்ப்பாக இதை சத்யராஜ் பயன்படுத்திக் கொள்கிறாரோ என்று தான் பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர் இதுநாள் வரை சத்யராஜ் பற்றி சூப்பர்ஸ்டார் ரஜினி எந்த ஒரு இடத்திலும் மரியாதை குறைவாக பேசியதே இல்லை. அவரைப் பற்றி உயர்வாகத்தான் பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

Recent Comments