V4UMEDIA
HomeNewsKollywoodஅனைத்து தரப்பு ரசிகர்களையும் குறிவைத்து உருவாகும் மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன்

அனைத்து தரப்பு ரசிகர்களையும் குறிவைத்து உருவாகும் மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன்

நடிகர் மோகன்லால் படங்களை மலையாளம் தாண்டி மற்ற மொழிகளிலும் ரசித்துப்பார்க்கும் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கின்றது. அதில் சிலர் அவர் நடிப்புக்காகவும், சிலர் ஆக்சனுக்காகவும் படம் பார்ப்பார்கள். த்ரிஷ்யம் போன்ற படங்களை த்ரிலிங்கிற்காக அனைத்து தரப்பு ரசிகர்களும் பார்த்து ரசித்தனர்.

அதே சமயம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில் வெளியான புலி முருகன் திரைப்படம் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரையும் திருப்திப்படுத்திய படமாக அமைந்தது.

அதன் பிறகு ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது அதே பாணியில் மோகன்லால் நடித்து வரும் மலைக்கோட்டை வாலிபன் என்கிற படம் தயாராகி வருகிறது. இந்த படம் மல்யுத்தத்தை மையப்படுத்தி உருவாகி வருகிறது.

மலையாளத்தில் வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட படங்களை இயக்கி வரும் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான் மற்றும் கேரளா ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி, இதில் மோகன்லால் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது.

Most Popular

Recent Comments