சமந்தா நடிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் தற்போது வெளியாகி உள்ள படம் சாகுந்தலம். புராண காவியமான சாகுந்தலம் கதையை தழுவி இந்த படம் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது. இந்த படத்தில் சகுந்தலை கதாபாத்திரத்தில் சமந்தா மற்றும் துஷ்யந்த மகாராஜா கதாபாத்திரத்தில் தேவ் மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்..

மேலும் பிரகாஷ்ராஜ், மதுபாலா, கௌதமி, மோகன்பாபு என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் கிளைமாக்ஸ் நெருங்குவதற்கு சற்று முன்னதாக தோன்றும் பரதன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அல்லு ஆர்ஹா அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு விட்டார்.

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மகளான இவர் இந்த படத்தின் மூலம் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். ஆனால் முதல் படம் என்பது போல தெரியாமல் தனது துடுக்குத்தனமான வசனங்களாலும் துடிப்பான நடிப்பாலும் அனைவர் மனதையும் கொள்ளை கொண்டு விட்டார் அல்லு ஆர்ஹா.

அவரது தந்தையை போன்ற நடிப்பு ஆற்றல் அவருக்குள் இயல்பிலேயே இருப்பது இந்த படத்தில் வெளிப்பட்டுள்ளது. இனி அடுத்தடுத்து பல படங்களில் இவரை குழந்தை நட்சத்திரமாக நாம் பார்க்கலாம்.