பிரபுதேவா ஏற்கனவே பொன் மாணிக்கவேல் என்கிற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து அந்த படம் ஓரளவு வரவேற்பு பெற்றாலும் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் பிரபுதேவா நடிப்பில் முசாசி என்கிற படம் தயாராகியுள்ளது.

அறிமுகம் இயக்குனர் ஷாம் ரோட்ரிக்ஸ் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் மீண்டும் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் பிரபுதேவா. இதில் ஆச்சரியமான விஷயம் பிரபுதேவாவுக்கு இந்த படத்தில் ஜோடி இல்லை. சொல்லப்போனால் படத்தில் கதாநாயகியே இல்லை.

அதே சமயம் முக்கிய வேடங்களில் நடிகர்கள் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, மலையாள நடிகை லியோனா லிஷாய், அருள்தாஸ், நடிகர் ‘மாஸ்டர்’ மகேந்திரன், ‘பழைய ஜோக்’ தங்கதுரை, மகேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
மேலும் பிரபல நாட்டுப்புற பாடகர் ஆன அந்தோணி தாசன் இந்த படத்தில் ஒரு சூப்பரான பாடல் ஒன்றை பாடி உள்ளார். வரும் சம்மரில் இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்காக திட்டமிடப்பட்டு போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.