V4UMEDIA
HomeNewsKollywoodஇறுதிச்சுற்றுக்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணைந்த காளி வெங்கட்

இறுதிச்சுற்றுக்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணைந்த காளி வெங்கட்

சாக்லேட் பாயாக வலம் வந்த மாதவன் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு ஒதுங்கியது போல தோன்றினாலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படத்தின் மூலம் மீண்டும் வெற்றிகரமாக தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கினார். அதை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ராக்கெட்ரி படத்திலும் இயக்கி நடித்து வெற்றியைப் பெற்றார்.

இந்த நிலையில் தற்போது இறுதிச்சுற்று, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களை தயாரித்த சசிகாந்த் இயக்குனராக அறிமுகமாகும் டெஸ்ட் என்கிற படத்தில் மாதவன் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் சித்தார்த், நயன்தாரா ஆகியோரும் நடிக்கின்றனர்.

 இந்த நிலையில் இந்த காலத்தில் நகைச்சுவை நடிகர் காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். ஏற்கனவே இறுதி சுற்று படத்தில் மாதவனுடன் இவர் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கம் மூலமாக தெரிவித்துள்ள காளி வெங்கட், “இறுதி சுற்று படத்திற்கு பிறகு மீண்டும் உங்களுடன் நடிப்பது பெரும் மகிழ்ச்சி” என்று மாதவன் பற்றி கூறியுள்ளார்

Most Popular

Recent Comments