V4UMEDIA
HomeNewsKollywoodஜெயிலர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை மிர்னா

ஜெயிலர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை மிர்னா

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ஜெயிலர். இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்கிற அதிரடி ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

மலையாளத்திலிருந்து மோகன்லால், கன்னடத்தில் இருந்து சிவராஜ்குமார், பாலிவுட்டில் இருந்து ஜாக்கி ஷெராப் என ஒவ்வொரு மொழியில் இருந்தும் முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளனர் அதுமட்டுமல்ல தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, பிரியங்கா மோகன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களும் இதில் நடித்துள்ளனர்.

மேலும் இன்னும் சில நட்சத்திரங்களும் இந்த படத்தில் தங்கள் இணைந்து பணியாற்றிய தகவலை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழில் பட்டதாரி என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அதிதி மேனன் என்கிற மிர்னா மேனன் தற்போது ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளதாக ஒரு மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.

கிட்டத்தட்ட 47 நாட்கள் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடித்ததாகவும் படம் முழுவதும் அவருடன் பயணிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளதாகவும் படப்பிடிபின்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் உழைப்பையும் அவரது நடிப்பையும் கண்டு பிரமித்து போனதாகவும் வியப்புடன் கூறியுள்ளார் மிர்னா மேனன்.

யாவர் சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான பிக் பிரதர் படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

Recent Comments