V4UMEDIA
HomeNewsKollywoodதொடர் பிரமோஷன் நிகழ்ச்சிகளால் சமந்தாவுக்கு உடல் நலக்குறைவு

தொடர் பிரமோஷன் நிகழ்ச்சிகளால் சமந்தாவுக்கு உடல் நலக்குறைவு

சமந்தா நடிப்பில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் சாகுந்தலம். புராண கால படமாக உருவாகி உள்ள இந்த படத்தை இயக்குனர் குணசேகர் இயக்கியுள்ளார். சகுதலை கதாபாத்திரத்தில் சமந்தாவும் துஷ்யந்த மகாராஜா கதாபாத்திரத்தில் தேவ் மோகனும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கடந்த ஒரு மாதமாகவே தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார் சமந்தா. இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தொடர்ந்து புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்ததால் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு காய்ச்சலில் அவதிப்பட்டு வருகிறார் சமந்தா.

அதனால் தான் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்ளவில்லை என தெரிகிறது. அதேசமயம் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து, இந்த படத்தின் புரமோஷன் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் சமந்தா.

Most Popular

Recent Comments