நடிகர் மன்சூர் அலிகான் 90களில் தான் பிசியான நடிகராக வலம் வந்த காலத்திலேயே ஒரு இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் மாறி சில படங்களை தயாரித்து இயக்கினார். அதன்பிறகு சமீப வருடங்களாக வில்லன் நடிப்பை ஒதுக்கி வைத்துவிட்டு காமெடியில் களைகட்டி வருகிறார் மன்சூர் அலிகான்.
அந்த வகையில் தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்தில் கூட மிக முக்கியமான வேடத்தில் அவருடன் இணைந்து நடித்து வருகிறார் மன்சூர் அலிகான்.

இது ஒரு பக்கம் இருக்க மதுவை மையமாக வைத்து சரக்கு என்கிற படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ளார் மன்சூர் அலிகான். அவருக்கு ஜோடியாக வலினா பிரின்ஸ் நடிக்கிறார். சிறப்பு தோற்றத்தில் நாஞ்சில் சம்பத் நடிக்கிறார்.

இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், கோதண்டம், கிங்ஸ்லி, சேசு, தீனா, ரவிமரியா, லொள்ளு சபா மனோகர், மூஸா, மதுமிதா, வினோதினி, லியாகத் அலிகான், பயில்வான் ரங்கநாதன், பாரதி கண்ணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தை ஜெ ஜெயகுமார் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.