தமிழ் சினிமாவையே கலாய்த்து தமிழ்ப்படம் என்கிற படத்தை தயாரித்தவர் தயாரிப்பாளர் ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் அதைத்தொடர்ந்து விக்ரம் வேதா, இறுதிச்சுற்று என தொடர்ந்து ஹிட் படங்களை தயாரித்தார். சினிமாவின் மீது தீராத ஆர்வம் கொண்ட அவர் இன்னொரு பக்கம் ஒரு படைப்பாளியாகவும் தன்னை வெளிப்படுத்த சரியான நேரம் பார்த்து காத்திருந்தார்.
அந்த வகையில் தற்போது டெஸ்ட் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அடி எடுத்து வைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகர்களாக மாதவன், சித்தார்த் ஆகியோர் நடிக்க கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
நடிகர் சித்தார்த்தை பொறுத்தவரை எப்பொழுதுமே சஷியுடன் நெருக்கமான நட்பு பாராட்டி வருபவர். அதேபோல இறுதிச்சுற்று படத்தை கொடுத்ததற்காக எப்போதும் நன்றி கடன் பெற்றுள்ளவர் மாதவன்.
அதனால் தான் இந்த இருவரும் இவரது படத்தில் இணைந்துள்ளனர். சஷிகாந்த் இயக்குனர் ஆனதற்கு மாதவன் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்