மலையாளத்தில் குறிப்பிடத்தக்க படங்களை இயக்கி பிரபலமான இயக்குனராக இருப்பவர் ரெஜிஷ் மிதிலா. இவர்தான் நடிகர் விஜய்சேதுபதியை முதன்முதலாக மலையாளத்தில் அறிமுகப்படுத்தி மார்கோனி மத்தாய் என்ற படத்தை இயக்கியவர். இந்தநிலையில் தற்போது யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் யானை முகத்தான் என்கிற படம் மூலம் தமிழிலும் இயக்குனராக அடியெடுத்து வைத்துள்ளார்.
இந்த படத்தில் நடித்த ரமேஷ் திலக், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் ரெஜிஷ் மிதிலா டைரக்சனில் ரமேஷ் திலக் நடித்தபோது தான் உருவாக்கி வைத்திருந்த ஒரு கதையை அவரிடம் ஏதேச்சையாக கூறிய சமயத்தில் இதற்கு பொருத்தமான நபராக யோகிபாபு இருப்பார் என கூறியுள்ளார் ரமேஷ் திலக்
அதன்பிறகு யோகிபாபுவை சந்தித்து தனது கதையின் மூலம் ஈர்த்த ரெஜிஷ் மிதிலா இப்போது யானை முகத்தான் என்கிற படத்தை யோகிபாபுவை வைத்து இயக்கியும் முடித்துவிட்டார். இதில் விநாயக கடவுளை கும்பிடும் அவரது தீவிர பக்தனாக ரமேஷ் திலக்குடன் நடித்துள்ளார்.
விநாயகன் என்கிற பெயரிலேயே பூமிக்கு வரும் விநாயக கடவுளாக யோகிபாபு நடித்துள்ளார் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் துவங்கி சென்னை வரை நடத்தியுள்ளார்கள்.
இந்த நிலையில் இந்த இந்த படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது
இப்போது இதே நாளில் ருத்ரன், சாகுந்தலம், அருள்நிதி நடித்துள்ள திருவின் குரல் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாக இருக்கின்றன. இந்த நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் 21ஆம் தேதிக்கு ரிலீஸ் ஆகும் என புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காரணமே இன்றி இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது என தயாரிப்பு நிறுவனம் வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இந்த தகவலை கூறியுள்ளது.