V4UMEDIA
HomeNewsKollywoodஇந்தியன்-2 வில் நடிப்பதை உறுதி செய்த காளிதாஸ் ஜெயராம்

இந்தியன்-2 வில் நடிப்பதை உறுதி செய்த காளிதாஸ் ஜெயராம்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் இடம்பெறும் நட்சத்திரங்கள் குறித்த விபரங்கள் அவ்வப்போது வெளிப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்த படத்தில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. இந்த தகவலை அவரே வெளியிட்டுள்ளார்,

இதற்கு முன்பாக லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் கமல் நடித்த விக்ரம் படத்தில் கமலுடன் இணைந்து அவரது மகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் காளிதாஸ் ஜெயராம்,

இந்தநிலையில் மீண்டும் அவருடன் அவரது அடுத்த படத்திலேயே இணைந்து நடிப்பது சாதாரண விஷயம் அல்ல. அதுவும் இயக்குனர் ஷங்கர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய ஒன்று.

இதற்கு முன்பு கமல் காளிதாஸின் தந்தையான ஜெயராமுடன் மிக நெருக்கமான நட்பு பாராட்டி பழகி வருபவர். அவருடன் பஞ்சதந்திரம், தெனாலி, உத்தமவில்லன் போன்ற படங்களிலும் இணைந்து நடித்துள்ளார். தற்போது அவரது மகனுடன் தொடர்ந்து இணைந்து, அடுத்த தலைமுறை நட்பாக அதை மாற்றி உள்ளார் கமல்.

Most Popular

Recent Comments