V4UMEDIA
HomeNewsKollywoodலால் சலாம் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

லால் சலாம் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா கடந்த 12 வருடங்களுக்கு முன்பு தனுஷ் நடித்த 3 என்கிற படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து கௌதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை என்கிற படத்தை இயக்கினார்.

இந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது லால் சலாம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிக முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்கிறார்.

படத்தில் கதாநாயகனாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் நடிக்கின்றனர். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர் ரகுமான் இதற்கு இசை அமைக்கிறார்.

கடந்த இரண்டு மாதங்களாக திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சி பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கிட்டத்தட்ட 34 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

அனைவரும் இந்த மகிழ்ச்சியை கேக் வெட்டி கொண்டாடி படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ஐஸ்வர்யா ரஜினி கூறும்போது, “கடந்த 34 நாட்களில் எங்கள் வாழ்வே இதுதான். இப்பொழுது முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளோம். இதை உருவாக்கி தந்த என் பட குழுவினர் அனைவருக்கும் நன்றி. உங்கள் ஒத்துழைப்பினால் தான் எந்தவித தடங்களும் இல்லாமல் இதனை நாம் முடித்திருக்கிறோம். சந்தோஷம் என்பது நாம் எப்படி இருக்க வேண்டும் என்று நாமே தேர்ந்தெடுப்பது தான்” என்று கூறியுள்ளார்

Most Popular

Recent Comments