V4UMEDIA
HomeNewsKollywoodசினிமாவிலும் ஹீரோ ஹீரோயின் ஆக இணைந்த பிக்பாஸ் புகழ் அமீர் பாவ்னி

சினிமாவிலும் ஹீரோ ஹீரோயின் ஆக இணைந்த பிக்பாஸ் புகழ் அமீர் பாவ்னி

கடந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலமான ஜோடியாக மாறியவர்கள் அமீர்-பாவ்னி ஜோடி. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர்கள் இருவரும் நிஜமான காதலர்களாகவே மாறினார்கள். வெளியே நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாகவே சென்று கலந்து கொண்டு வருகிறார்கள். சில ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்று வருகிறார்கள்.

கடந்த ஜனவரி மாதம் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தின் இவர்கள் இருவரும் அஜித்தின் நெருங்கிய நண்பர்களாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் கதாநாயகன் கதாநாயகியாக  புதிய படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தை அமீரே இயக்குகிறார். இந்த படத்தின் துவக்க விழா பூஜை இன்று நடைபெற்றது.

இன்று நடந்த இப்படத்தின் பூஜையில், படக்குழுவினருடன் தயாரிப்பாளர் G.தனஞ்செயன், திண்டுக்கல் லியோனி, விஜய் ஆதிராஜ், நிரூப், பிரியங்கா, ஷாரிக், ரச்சிதா, கிஷோர்,சத்யா, ரியோ முதலானோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்

முழுக்க முழுக்க ரொமான்ஸ் காமெடியாக உருவாகும் இப்படம் தற்கால இளைஞர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் வகையில் ரொமான்ஸ் காமெடி படமாக உருவாகவுள்ளது.

இப்படத்தில் மன்சூர் அலிகான், காயத்திரி ஜெயராம், சுரேஷ் சக்ரவர்த்தி, சாதனா, VTV கணேஷ், அலீனா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் தலைப்பு அழகான புரமோ வீடியோவுடன் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது

Most Popular

Recent Comments