மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் உருவாகி உள்ள படம் ரிப்பப்பரி. இந்த படத்தில் இன்னொரு கதாநாயகனாக ஸ்ரீனி நடிக்க கதாநாயகியாக காவியா அறிவு மணி நடித்துள்ளார். கேரளாவில் புகழ்பெற்ற நடிகை ஆரத்தி பொடி இன்னொரு கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஹாரர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் அருண் கார்த்திக் என்பவர் இயக்கியுள்ளார். அது மட்டுமல்ல இந்த படத்தை அவரே தயாரித்தும் இருக்கிறார்.

வரும் ஏப்ரல் 14ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பத்திரிக்கையாக சந்திப்பு நடைபெற்றது.
இதில் பேசிய இயக்குனர் அருண் கார்த்திக், “முதன் முதலில் சொந்தமாகப் படம் இயக்குகிறோம் அதுவும் தயாரித்து இயக்குகிறோம் என்ற போது பயம் அதிகமாக இருந்தது. ஆனால் சொந்தமாகத் தயாரித்து இயக்க நமக்குத் தைரியம் வர ஒரு நல்ல கதை வேண்டும் அந்த வகையில் இந்தப்படத்தின் கதை இந்த முயற்சியை எடுக்க உந்துதலாக இருந்தது.

என்ன தான் கதை இருந்தாலும் சொந்தமாகத் தயாரித்தாலும் உடனிருப்பவர்கள் அந்தக்கதையை நம்புபவர்களாக நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும். அந்த வகையில் இப்படத்தில் வேலை பார்த்த அனைவரும் தமிழ் சினிமாவில் பெரிய இடத்திற்குச் செல்லும் திறமை கொண்டவர்கள். அவர்களால் தான் இந்தப்படம் சாத்தியமானது என்று கூறியுள்ளார்