40 வருடங்களுக்கு முன்பு இயக்குனர் இமயம் பாரதிராஜா, இசைஞானி இளையராஜா, கவிப்பேரரசு வைரமுத்து என தென் தமிழகத்திலிருந்து திறமைசாலிகள் அனைவரும் ஒன்றாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து தங்களை வளர்த்துக் கொண்டதுடன் தமிழ் சினிமாவையும் வளர்த்தனர்.
ஆனால் யார் கண்பட்டதோ தெரியவில்லை, இடையில் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒவ்வொருவரும் பிரிந்தனர். அதைத்தொடர்ந்து பாரதிராஜா தனது மன கசப்புகளை மறந்து இளையராஜாவுடன் தற்போது மீண்டும் நெருங்கிய நட்பிலிருந்து வருகிறார்.
அதேபோல கவிப்பேரரசு வைரமுத்துவிடமும் அவர் நெருங்கிய நட்பு பாராட்டி வருகிறார். ஆனால் இன்னும் இளையராஜா வைரமுத்து இருவர் மட்டும் இரு துருவங்களாகவே இருக்கின்றனர்.
இந்தநிலையில் தற்போது ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாரதிராஜா நடிக்கும் படத்தில் வைரமுத்து ஒரு பாடலை எழுதி தனது பங்களிப்பை கொடுத்துள்ளார்.
தற்போது அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள திருவின் குரல் என்கிற படத்தில் அப்பா என் அப்பா என்கிற பாடலை வைரமுத்து எழுதியுள்ளார்.
இந்த பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த பாடலுக்கு சாம் சி எஸ் இசை அமைத்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஹரிஷ் பிரபு என்பவர் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ஆத்மிகா நடித்தார்.