Home News Kollywood அச்சம் என்பது இல்லையே டப்பிங்கை துவங்கிய அருண்விஜய்  

அச்சம் என்பது இல்லையே டப்பிங்கை துவங்கிய அருண்விஜய்  

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இயக்குனர் விஜய் தற்போது அச்சம் என்பது இல்லையே என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தை சமீபத்தில் தமிழகம் என்றும் வெளியிடும் உரிமையை லைகா நிறுவனம் பெற்றதை தொடர்ந்து தற்போது மிஷன் சாப்டர் 1 என டைட்டில் மாற்றப்பட்டு அச்சம் என்பது இல்லையே என்பது இதன் டேக் லைனாக மாற்றப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட ஐந்து வருட இடைவெளிக்கு பிறகு நடிகை எமி ஜாக்சன் மீண்டும் இந்த படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு திரும்பி உள்ளார். ஆக்சன் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்திற்கு தற்போது அருண்விஜய் டப்பிங் பேசி வருகிறார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.