தமிழ் சினிமாவில் உள்ள மினிமம் கேரண்டி ஹீரோக்களை குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வருபவர் நடிகர் விமல். அதேசமயம் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு அவரது படங்கள் எதுவும் பெரிய அளவில் வெளியாகவில்லை.

இந்தநிலையில் அவர் நடித்துள்ள தெய்வ மச்சான் என்கிற திரைப்படம் இந்த இடைவெளியை நிரப்பும் விதமாக வரும் ஏப்ரல் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தை மார்டின் நிர்மல் குமார் என்பவர் இயக்கியுள்ளார். கதாநாயகியாக புதுமுக நடிகை நேகா என்பவர் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ‘ஆடுகளம்’ நரேன், பாலசரவணன், வேல. ராமமூர்த்தி, முருகானந்தம், வத்சன் வீரமணி, தங்கதுரை, பிக் பாஸ் அனிதா சம்பத், தீபா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலரை மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நடிகர்கள் சூரி மற்றும் ஆதி இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைத்தளப்பக்கங்களில் வெளியிட்டனர். அந்த வகையில் இந்த தெய்வ மச்சான் திரைப்படம் விமலுக்கு ஒரு கம் பேக் படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.