V4UMEDIA
HomeNewsKollywoodநயன்தாராவின் 75வது படத்திற்கு இசையமைக்கும் தமன்

நயன்தாராவின் 75வது படத்திற்கு இசையமைக்கும் தமன்

இயக்குனர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்து கொண்ட பின்னரும் நயன்தாரா வழக்கம் போல் படங்களில் நடிப்பதில் பிசியாக இருக்கிறார். ஏற்கனவே அவர் அட்லீ இயக்கத்தில் இந்தியில் ஷாருக்கானுடன் ஜவான் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இதுதவிர ஜெயம் ரவியுடன் நடித்துள்ள இறைவன் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தநிலையில் தற்போது அவரது 75வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நயன்தாரா. சில நாட்களுக்கு முன்பு பூஜையுடன் துவங்கப்பட்ட இந்த படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கிறார்.

நடிகர் ஜெய் இந்த படத்தை ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றிய நீல் கிருஷ்ணா என்பவர் இயக்குகிறார். இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமிழ் இசையமைக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வாரிசு படம் மூலம் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தமிழ்த்திரையுலகிற்கு  திரும்பி வந்து ரஞ்சிதமே உள்ளிட்ட ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்திய தமன், மீண்டும் இந்த படத்திற்கு இசையமைப்பதன் மூலம் தமிழ் திரை உலகிலும் இனி கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கலாம்.

Most Popular

Recent Comments