V4UMEDIA
HomeNewsKollywoodபுஷ்பா 2 பரபரப்பு ஆரம்பமானது

புஷ்பா 2 பரபரப்பு ஆரம்பமானது

கடந்த 2021 டிசம்பர் மாதம் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் தயாரான புஷ்பா படத்தின் முதல் பாகம் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். வில்லனாக நடிகர் பகத் பாசில் நடிக்க ஒரே ஒரு பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்தார்.

இந்த படம் வெளியான சமயத்தில் படத்தின் அதிரடி ஆக்சன் காட்சிகள், ராஷ்மிகாவின் வித்தியாசமான நடன அசைவுகளுடன் கூடிய சாமி சாமி பாடல் ,கிக்கேற்ற கூடிய சமந்தாவின் ஓ அண்டாவா பாடல் என ரசிகர்களை ஈர்க்கும் அம்சங்கள் இதில் எக்கச்சக்கமாக இருந்ததால் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது.

இதனால் இந்த படத்தில் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு பலரிடமும் கடந்த வருடம் முழுவதுமே இருந்து வந்தது. ஆனால் புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு இன்னும் நடத்தப்பட வேண்டி இருப்பதால் படக்குழுவினர் அதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘புஷ்பா’ படக்குழு #HuntForPushpa என்ற ஹேஷ்டேக்கின் கீழ் ‘Pushpa 2: The Rule’ படத்தின் தனித்துவமான கான்செப்ட் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

’புஷ்பா’ படத்தின் தொடர்ச்சியான ’புஷ்பா 2: தி ரூல்’ எப்படி இருக்கும் என்ற ரசிகர்களின் கற்பனையை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்த வீடியோவில் காட்சிகளை அமைத்துள்ளனர்.

புஷ்பா 2: தி ரூல்’ பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. இது உண்மையிலேயே ’புஷ்பா’ ஆட்சியின் ஆரம்பம். புஷ்பாவின் கதையும் எழுச்சியும் இரண்டாம் பாகத்தில் இன்னும் தீவிரமாக இருக்கும் என்கிறார்கள்

Most Popular

Recent Comments