V4UMEDIA
HomeNewsKollywoodதமிழில் நான் தேறுவேனா ? வெங்கட்பிரபுவிடம் சந்தேகம் கேட்ட நாகசைதன்யா

தமிழில் நான் தேறுவேனா ? வெங்கட்பிரபுவிடம் சந்தேகம் கேட்ட நாகசைதன்யா

தெலுங்கு திரையரங்கில் 30 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகராக நடித்து வருபவர் நடிகர் நாகார்ஜுனா. இவரது மகன் நாகசைதன்யாவும் தந்தையை போல கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தெலுங்கு திரையுலகில் இளம் முன்னணி நடிகராக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள கஸ்டடி என்கிற படத்தின் மூலம் தமிழில் முதன் முறையாக அடியெடுத்து வைக்கிறார் நாக சைதன்யா.

இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க முக்கிய வேடத்தில் சரத்குமார், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் இந்த படத்திற்கு இணைந்து இசை அமைக்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் டீசர் வெளியானது. இந்த நிலையில் தற்போது கஸ்டடி படக்குழுவினர் கிட்டத்தட்ட மூன்று நிமிடம் ஓடக்கூடிய ஒரு புரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இதில் வெங்கட்பிரபு லாக்கப்பில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார். சின்னமனூர் போலீஸ் ஸ்டேஷன் கான்ஸ்டபிளாக நடித்துள்ள நாக சைதன்யா வெங்கட்பிரபுவிடம் வந்து இந்த படம் தெலுங்கில் உங்களுக்கு ரீச் ஆகிவிட்டு எனக்கு தமிழில் ரீச் ஆகாமல் போய்விட்டால் என்ன செய்வது என்று சந்தேகத்துடன் ஒரு கேள்வி எழுப்புகிறார்.

நிச்சயமாக தமிழிலும் நீங்கள் ரீச் ஆவீர்கள் என்று நம்பிக்கை கொடுக்கிறார், வெங்கட் பிரபு. இதை தொடர்ந்து இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகும் என கேட்க, உடனடியாக அங்கிருந்து யுவன் சங்கர் ராஜாவுக்கு போன் போட்டு கேட்கிறார் வெங்கட் பிரபு.

இன்னும் மூன்று நாட்களில் (ஏப்-10) ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடலாம் என யுவன் சங்கர் ராஜா பதில் கூறுகிறார். இதையே ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு தேதிக்கான அறிவிப்பு புரோமோவாக மாற்றிய வெங்கட் பிரபுவின் புத்திசாலித்தனத்தை பாராட்டிய ஆக வேண்டும்.

Most Popular

Recent Comments